சீனா நன்கொடையாக வழங்கிய மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

Wednesday, May 26th, 2021

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

பீஜிங்கிலிருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இலங்கையின் எயார்லைன்ஸுக்கு சொந்தமான சிறப்பு விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் இன்று புதன்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த தடுப்பூசிகளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

குறித்த தடுப்புஶ்ரீசிகள் சீன அரசு இலங்கைக்கு நன்கொடையளித்த இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள் ஆகும்.

அதன்படி, இந்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்ட தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: