சர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்!

Tuesday, May 28th, 2019

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 51 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிசேறியன் சத்திர சிகிச்சையின் பின்னர் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டதாக என சாதாரண வைத்திய பரிசோதனை மூலம் இலகுவாக உறுதி செய்ய முடியும் என மகப்பேற்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்தரிக்க வேறு முறைகளில் உள்ள தடையும் இவ்வாறான வைத்திய பரிசோதனை மூலம் அடையாளம் காண முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபியினால் மேற்கொள்ளப்பட்ட சிசேறியன் சத்திர சிகிச்சை தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை நிலை ஏற்பபட்டுள்ளது.

சிசேறியன் அறுவை சிகிச்சையின் போது பெண்கள் மீண்டும் கருத்தரிக்க முடியாத வகையில் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியர் சியாப்தீன் மொஹமட் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையில் இதுவரையில் 51 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

முறைப்பாடு செய்த அனைத்து பெண்களினதும், தரவுகள் பதவி செய்த பின்னர் அது தொடர்பில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts: