உள்ளூராட்சித் தேர்தல் முறைமை 60/40க்கு கட்சித்தலைவர்கள் இணக்கம்.

Tuesday, July 11th, 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் திருத்த வரைபில் இதுவரை நீடித்துவந்த கலப்பு உறுப்பினர் விகிதாசார முறைமையும், விகிதாசார எண்ணிக்கை முறைமையில் நீடித்த சர்ச்சைக்கும் இன்று பிரதமர் தலைமையிலான கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை புதிய வட்டார முறையின் கீழ் 70/30 விகித அடிப்படையில் நடத்தலாம் என்று நிபுனர்கள் குழு வரைபொன்றை கையளித்துள்ள நிலையில், அந்த விகிதாசாரத்தை 60/40 ஆக மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சிறிய கட்சிகளும், சிறுபான்மை கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் இன்று(11.07.2017) அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் விகிதாசார பரிந்துரையை 60ஃ 40 ஆக திருத்தம் செய்வது என்றும், 40 விகிதத்திற்குள் 25 விகிதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கும் கட்சித் தலைவர்கள் இணக்கம் எட்டியுள்ளனர்.

இது தொடர்பான திருத்த யோசiனையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள வரைபில் திருத்தம் செய்வதென்றும் இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Related posts: