அதிக கட்டணத்தை அறவிடும் பேருந்துகள் மீது நடவடிக்கை!

Wednesday, August 3rd, 2016

புதிய பேருந்து கட்டண திருத்தத்தைவிட அதிகமாக கட்டணங்களை அறவிடும் பேருந்துகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் இது தொடர்பான சோதனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம். ஏ. பி . ஹேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறு அதிக பணம் அறவிடப்படும் பேருந்துகளுக்கெதிராக தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று பெஸ்டியன் மாவத்தையில் பேருந்துகளில் சோதனைகளில் ஈடுபட்டதாகவும் எனினும் பஸ் கட்டணங்கள் தொடர்பான சோதனைகள் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

Related posts:

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவை...
கொரோனா பரவலால் 92 சதவீத ஆரம்ப சுகாதார சேவைகள் சீர்குலைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு!
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு ...