சிறையில் கைதிகளை கொலைசெய்ய சதித்திட்டம் – வெளியானது அதிர்ச்சிச் தகவல்!

Wednesday, July 22nd, 2020

கைதிகளை சிறைச்சாலை பேருந்தகளில் அழைத்துச் செல்லும்போது அவர்களை மறைந்திருந்து தாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த எச்சரிக்கை தகவலை புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் களுத்துறையில் வைத்து சமயங் என்கிற பாதாள உலகக் குழு ஒன்றின் தலைவரை மறைந்திருந்து ஆயுதக்கும்பல் தாக்கி படுகொலை செய்தது.

இதே போல கஞ்சிப்பான இம்ரானை படுகொலை செய்யவே கொஸ்கொட தாரக்கவினுடையது என கூறப்படும் ஹோமாகம, பிட்டிப்பன பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் தயார்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: