கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வருகின்றது.

Tuesday, April 3rd, 2018

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தை நாளை(04) முடிவுக்குக்கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாதாந்த நிலுவைக் கொடுப்பனவு உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து, 34 நாட்களாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மற்றும் ஏனைய சகல நாளாந்த நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கல்விசாரா ஊழியர்களுக்கும், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹாசிமிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

குறித்த பேச்சுவார்த்தையினை தொடர்ந்து நாளை முதல் தமது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Related posts:


விமர்சனங்களை நியாயமாகக் கருதி சுய சிந்தனையுடன் நாட்டை வழிநடத்துவதே அவசியம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜப...
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் - கல்வி அமைச்சின் செயலா...
இலங்கை - இந்திய உறவை வலுவாக்க பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியம் - இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மி...