ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடிமைப்படுத்தப்படும் இலங்கையர்கள்!

Wednesday, July 27th, 2016

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வரும் இலங்கையர்கள் சிலரின் வேலை காலம் முடிவடைந்துள்ள போதும் வேலை வழங்குனர்கள் மீண்டும் வேலை காலத்தை புதுப்பிக்காமல் கொடுப்பனவுகள் வழங்காமல் அடிமைப்படுத்தப்படுவதாக தொம்சன் ரொய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய வலய நாடுகளை சேர்ந்த இந்தியாஇ இலங்கைஇ பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை  சேர்ந்த  தொழிலாளர்கள் வறுமையின் நிமிர்த்தம் தொழிலிற்காக அதிகமானோர் செல்லும்  நாடாக  மத்திய  கிழக்கின் ஐக்கிய அரபு இராச்சியம்விளங்குகின்றது.

அண்மையில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் 100இற்கும் மேற்பட்ட ஆசிய வலய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் காலாவாதியானவிசாக்கள் மூலம் பணிபுறிவதாம் மேலும்  இவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்தசில மாதங்களாக  வழங்கப்படாமல்  உள்ளதோடு தொழில் முகவர்கள் இவர்களின்விசாக்களை புதிப்பிக்க மறுத்து வருகிறமையால் தங்களால் தங்களின் சொந்த நாட்டிற்குசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள தொழிலாளர்கள் தம்நாட்டுஅரசாங்கத்திடம் உதவிகளை கோறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: