சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

Wednesday, February 15th, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நீதிமன்றில் சரணடைவதற்கு சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நோக்கி பயணித்த போது சசிகலா தரப்பு கார்களுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சசிகலாவின் காரை பின்தொடர்ந்து தமிழ்நாடு பதிவு எண்ணுடன் சென்ற ஐந்து கார்கள் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டடுள்ளது.

இதில் சசிகலா தரப்பு கார்களின் கண்ணாடி உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பெங்களூரு பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். குறிப்பாக, அவற்றில் சசிகலாவுக்கு உடைகளை எடுத்துச் சென்ற ஒரு காரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் சரணடைந்த சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறைச்சாலை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கைதி எண் 10711, இளவரசிக்கு கைதி எண் 10712, சுதாகரனுக்கு 10713 கைதி எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

sasikala2

Related posts: