சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 26th, 2023

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்டகு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் இன்று முன்னெடுக்கப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் இது நீதிமன்ற நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதற்காக சில சுற்று நிருபங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி சிறையில் இருக்கும் கைதிகளின் தண்டனை காலத்தையும் விளக்கமறியல் கைதிகளின் தண்டனை காலத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: