சிரியக் கொலையைக் கண்டித்து வடக்கில் போராட்டம்!

சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ்நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம் தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் நடைபெற்றது.
சிரியா கௌடாவில் நடைபெற்றுவரும் போரில் நாளாந்தம் ஆயிரக் கணக்கில் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் அதிகமாக அப்பாவிக் குழந்தைகளே கொல்லப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட, காயமடைந்த குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களூடாக வைரலாகி உலகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2009 இல் இதே போன்ற அழிவை தமிழ் மக்களும்; சந்தித்திருந்தனர். இந்த நிலையிலேயே அழிவை எதிர்கொண்ட இனம் என்ற வகையில் சிரிய மக்களுக்காக தமிழ் இளைஞர்கள் இந்த போராட்டத்தை வடக்கு கிழக்கில் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே சிரியாவில் கொடூரமான தாக்குதலில் மக்களும் சிறுவர்களும் கொல்லப்படுகின்றமையானது வன்மையாக கண்டிக்கத்தக்கது இதற்காக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மண்ணிலிருந்து நாங்கள் சிரியா தாக்குதலை கண்டித்து குரலெழுப்புவதை ஐ நா உதாசீனம் செய்யக்கூடாது என கிளிநொச்சி மாவட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் நடைபெற்ற சிரியா தாக்குதலுக்கு எதிரான கண்ஞன ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள இதனை தெரிவித்தனர்.
ஐ நா கண்களைமூடி மௌனியாக இருப்பதை விடுத்து சிரியாவில் பச்சிளம் பாலகர்கள் கொத்தாக கொலை செய யப்படுகின்ற நிலையில் விழிப்படைந்து வரைந்து செயற்பட்டு இதனை நிறுத்த வழிவகை செய்யவேண்டும் எனவும் உலகில் படுகொலைகள் எங்கு நடந்தாலும் அதனை தடுத்து நிறுத்தவும் பாதிக்கப்பட்ஞவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதற்காகவும் தொடர்ந்தும் போராடுவோம் எனவும் தெரிவித்தனர்.
Related posts:
|
|