தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு புதிய முறைமை தயாரிக்கப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, November 24th, 2023

தனியார்துறை ஊழியர்களின் ஆகக்குறைந்த அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

அத்துடன் அதற்கான  பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் முன்வைத்திருப்பது, நாடு மிகை பணவீக்கமாக மாறுவதைத் தடுப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டதாகவே உள்ளது

இந்த இலக்கை அடைய கடுமையான நிதி கட்டுப்பாடு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இந்த முயற்சியின் விளைவாக, செப்டம்பர் 2023க்குள் பணவீக்கத்தை 0.80% ஆகக் குறைத்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பலஸ்தீனம் என்ற இறையாண்மை கொண்ட நாடு எதிர்காலத்தில் உலக வரைப்படத்தில் சேர்க்கப்பட வேண்டும் - பலஸ்தீன ...
நிறுவனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களில் திருத்தம் – ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியீடு...
மழையுடன் கூடிய காலநிலை - சிறு பிள்ளைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவி வருவதாக சிறுவர் வைத்திய நிபுண...