வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் விடுத்துள்ள காலக்கேடு!
Thursday, January 2nd, 2020
அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் ,இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தன்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கலாநிதி என். எம்.பெரேரா நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தும் இது வரையில் எத்தகைய தீர்வும் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்திற்குள் தகுந்த தீர்வு இன்றேல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
Related posts:
போதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை!
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி!
இலங்கை வரும் இந்தியர்கள் தொடர்பில் அறிவுறுத்தல்!
|
|
|


