சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மூடப்பட்டது!

Tuesday, March 31st, 2020

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் நேற்றுமுதல் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமது ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்து கடமைகளை செய்து வருவதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவசர தூதரக உதவிகளுக்கு, பின்வரும் இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

•      (Consular Emergencies) +65 87414011/ +65 86546759/ Email: slhcs@lanka.com.sg

•      (Migrant Workers, including Fdws) + 65 84981785/ 91810257 Email: lypathi@lanka.com.sg

இதேவேளை, கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. தற்போது வரையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 766,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: