சவுதியுடன் நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம்.. !

Saturday, June 29th, 2019

சவுதி அரேபியாவில் இலங்கையர்கள் எவரும் மரணித்தால், அவர்களுக்கான நட்டயீட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத்தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சவுதி அரேபிய சட்ட நிறுவனம் என்பன இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதன்படி மூன்றாம் தரப்பொன்றின் கவனயீனமான காரணங்களுக்காக சவுதி அரேபியாவில் மரணிக்கின்ற இலங்கையர்களுக்கு நட்டயீடு வழங்குவதற்கான வழக்குகளை துரிதமாக ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சமூக வலுவூட்டல் நலன்புரி அமைச்சின் சுற்றுநிருபப்படி : சமுர்த்தி பயனாளிகளுக்கு குடும்பங்களில் பிறக்கு...
87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி - வலுசக்தி அ...