சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Monday, April 19th, 2021

சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் திட உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்திருந்தார்.

இதன்போது சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் திட உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் தமிழ் சிங்கள, புத்தாண்டுக்கு அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி.ஏகொடவெலே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீரஸ்வர பண்டார ஆகியோர் உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts: