சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் தினேஷ் வலியுறுத்து

Wednesday, February 17th, 2021

சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினாயுள்ளார்.

வெளிவிவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையின் அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள், உள்நாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் சர்வதேச தளங்களில் இருக்கும்போது ஒரே குரலில் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை சர்வதேச அளவில் ஒரே தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: