நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும் – வீண் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

Monday, March 15th, 2021

நான் அரசியல் செய்யவில்லை. நிர்வாகத்தையே முன்னெடுக்கின்றேன் என தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அதனூடாக மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான சந்திப்பொன்றின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – தேர்தல் விஞ்ஞாபனம் ஊடாக எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றி வருகின்றோம்.

அதன்படி நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என வழங்கிய உறுதிமொழி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் அதிலும் சிலர் குறை காண்கின்றனர். தொழிலாளர்களுக்கான நலன்கள் இல்லாது போய்விடும் எனவும் விமர்சிக்கின்றனர்.

நாம் தொழிலாளர்களை பாதுகாப்போம். எனினும், சந்தா வாங்கும் சிலர் தொழிலாளர்கள் நலன் பற்றி சிந்திப்பதில்லை என்றம் சுட்டிக்காட்டியுள்ளார்;

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அமையவுள்ளது. ஒரு வருடகாலப்பகுதியில் எம்மால் முக்கியமான சில விடயங்களை நிறைவேற்றமுடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று மலையகத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. எமது இளைஞர்களும் நம்புகின்றனர். நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும். வீண் விமர்சனங்களை முன்வைப்பர்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஊரடங்கு, தனிமைப்படுத்தல் சட்டங்களை மதிக்காதவர்களுக்கு தண்டப்பணம் விதித்த யாழ்ப்பாண நீதிமன்று!
எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் - சுகாதார சேவைகளின் பணிப்பாளர...
இறந்த பின்னரும் மக்களின் இதயங்களை வெல்வது இலகுவான காரியமல்ல - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவ...

கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி வர்த்தகர்களுக்கான அபராதம் - சட்டமூலம் சட்டமா அதிபருக்கு!
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும...
வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம்!