சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகம் – லிற்றோ காஸ் நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 5th, 2022

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, லாவ் காசை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வந்திருப்பதாக லாவ் காஸ் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதனை இறக்குவதற்கு தேவையான வங்கி நடவடிக்கைகளை இலங்கை வங்கி மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும் நிறுவன பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வலிகாமம்  தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் மூன்று வீதிகள் புனரமைப்ப...
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜி...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் - ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி முடிவு - அமைச்சர் பிரசன்ன தெரிவ...