கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தெரிவிப்பு
Friday, June 11th, 2021
!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக ஆயிரத்த 38 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 29 ஆயிரத்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு!
இராணுவத்தின் உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளது -‘சதொச’ மற்றும் கூட்டுறவு முகவர் நிலையங்கள் ஊ...
|
|
|


