சதோசவில் ரூ.15 விற்கும் முகக்கவசம் – ஒரு ருபாய் மஹபொல நிதியத்திற்கு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!

Saturday, January 2nd, 2021

சதோச நிறுவனங்களின் ஊடாக விற்பனை செய்யப்படும் முகக்கவசங்களின் வருமானத்தின் ஒரு பகுதியை பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகளான உயர்தரம் கொண்ட முகக்கவசங்கள் சதோசவின் ஊடாக சில்லறை விலையாக 15 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.

ஒரு முகக்கவசத்தை விற்பனை செய்வதன் ஊடாக கிடைக்கும் தொகையில் ஒரு ரூபா மகாபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு வழங்கப்படுகின்றது. தற்சமயம் மகாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கையிருப்பு 12 தசம் 2 பில்லியன்களாகக் காணப்படுகின்றது.

அதனை அதிகரிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவருகிறது. அதன் ஒரு கட்டமாக இது அமையும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் குறிப்பிட்டார்.

Related posts: