சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!

Saturday, July 13th, 2019

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல் எல்லையில் இருந்து 03 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் வைத்திய பரிசோதனையின் பின்னர் யாழ். கடற்றொழில் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை கூறியுள்ளது.


கூட்டமைப்பின் பேச்சில் நம்பிக்கை இல்லை : தொடர்கிறது  பட்டினிப்போராட்டம்
இலங்கை அணியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் மரணம்!
பொதுமக்களின் காணிகளை மீளவழங்குவதே அரசின் நோக்கம் - ரெஜினோல்ட் குரே!
எதிர்வரும் 29 ஆம் திகதி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனங்கள்!
நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் – வளிமண்டல திணைக்களம் !