சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை!

Tuesday, April 12th, 2022

உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலர் தேவையில்லாமல் எரிபொருளை சேகரித்து அதனை மோசடியான முறையில் பயன்படுத்துவதை அவதானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களில் நாடளாவிய ரீதியில் 68 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 8,025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மண்ணெண்ணெய் போன்ற எரிபொருள் விற்பனை நிலையங்களை சோதனையிட்டதன் பின்னர் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: