கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் அபராதம்!

Tuesday, October 11th, 2016

கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, சுவரொன்றின் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனும் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு 29,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .

விபத்தினை தவிர்க்காமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு எதிராக கொழும்பு மோட்டார் வாகன நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை ரமித் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு 29,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்ட அவரது சாரதி அனுமதிப் பத்திரமும் இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கறித்த சம்பவம் கடந்த செப்டம்பர் 22ம் திகதி நடைபெற்று இவர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

493900291Untitled-1

Related posts: