கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – அம்பலம் இரவீந்திரதாசன்!

Tuesday, May 29th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் அரியாலை ஜெய பாரதி சனசமூக நிலைய உறுப்பினர்களுடன் சந்தித்து குறித்த பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அண்மையில் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இரவீந்திரதாசன் குறித்த சனசமூக நிலைய நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அப்பகுதி மக்களது தேவைப்பாடுகள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக வீடமைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்வது வீதி புனரமைப்பு தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளால் இப்பகுதி மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக இதன்போது குறித்த நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

மக்களது கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய இரவீந்திரதாசன் குறித்த விடயத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார்.

Related posts:

கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்...
வட மாகாணத்தில் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்கா...
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதி...