கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் திடீரென ஏற்பட்ட தீ – சில மணி நேரம் தடைப்பட்டது மின்சாரம் !

Monday, November 27th, 2023

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் பிரதான மின் வடத்தில் (வயர்) தீ பற்றியமையால் சில மணி நேரம் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டு இருந்தது.

கோப்பாய் , இராச வீதி பகுதியில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதான மின் வடத்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார சபையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் , மின்சாரத்தை துண்டித்து , மின் வடத்தில் பற்றிய தீயை அணைந்தனர்.

பின்னர் மீள அவற்றை சீர் செய்து அப்பகுதிக்கான மின்சாரத்தை வழங்கினர். குறித்த சம்பவத்தால் , அப்பகுதியில் சில மணிநேரம் மின் தடை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: