பரீட்சை முறைமைகள் – பல்கலைக்கழக நுழைவு என்பனவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, January 30th, 2022

கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பரீட்சை கால அளவை மாற்றுவதோடு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மாதம் மற்றும் 10 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

முன்பதாக தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: