நாளை பிரித்தானிய அமைச்சர் இலங்கை வருகின்றார்!

Saturday, November 5th, 2016

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐ.நா மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி  நாளை இலங்கைக்கு வருகின்றார்.

இனமோதல்களில் பாலியல் வன்முறைகள் தொடர்பான பிரித்தானிய பிரதமரின் விஷேட பிரிதிநியாகவும் அமைச்சர் பரோனஸ் அனெலி பணியாற்றுகின்றார். பதவி காலத்தில் முதன்முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அமைச்சர் பரோனஸ் அனெலி எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருந்து பலதரப்பட்ட அரச மட்ட சந்திப்புகளில் ஈடுப்பட உள்ளதுடன் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் விஜயத்தின்போது, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தைப் பலப்படுத்துதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான இலங்கையின் முன்னெடுப்புகள்  தொடர்பாக  பிரித்தானிய அமைச்சர் பரோனஸ் அனெலி கவனத்தில் கொள்ளவுள்ளார்.  இவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்திக்க உள்ளார்.

நாளை மறுநாள் செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ள பிரித்தானிய அமைச்சர் வடமாகாண ஆளுனர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

மேலும் பிரித்தானிய நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்ட மிதிவெடி அகற்றிய பகுதிகள் மற்றும் அங்கு மீள் குடியமர்த்தப்பட்ட மக்களையுத் சந்திக்க உள்ளார்.  அத்துடன்  சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் பரோனஸ் அனெலி பேச்சுக்களில் ஈடுபடவுள்ளளுடன் பயணத்தில் இறுதியில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Baroness-Anelay-300x200

Related posts:


யுத்தம் காரணமாக அதிகளவான  பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் :வடமாகாண ஆளுநர் ரெஜினோல்...
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
இன்றுமுதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு - விவசாயி...