கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிரங்கள் – உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்து!

Friday, December 10th, 2021

புதிய ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, செல்வந்த நாடுகள், கொவிட் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளது.

ஒமிக்ரொன் திரிபு பரவல் காரணமாக, சில செல்வந்த நாடுகள், செயலூக்கி தடுப்பூசி ஏற்றலைத் துரிதப்படுத்துகின்றன.

பெருமளவில் மக்களுக்கு இதுவரையில் தடுப்பூசி செலுத்தாதுள்ள நாடுகளுக்கான விநியோகத்தில் இது தாக்கம் செலுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய ஒமிக்ரொன் திரிபிலிருந்து பாதுகாப்பு பெற, மேலதிக கொவிட் தடுப்பூசி அவசியமா? என்பது இதுவரையில் தெளிவாகத் தெரியவில்லை.

எனவே, செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளைப் பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: