கொழும்பில் விசேட போக்குவரத்து!
Tuesday, May 9th, 2017சர்வதேச வெசக் நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தொடர்பில், கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய நாளை மறுதினம் (11) பிற்பகல் 6.00 மணிக்கு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையததிற்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.அவரது பாதுகாப்பு கருதி, எதிர்வரும் மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது. குறித்த காலப் பகுதியில் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
அபிவிருத்தி இலக்கை அடைய ஜேர்மன் முழுமையான உதவி?
அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!
ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
|
|