கொரோனா வைரஸ்: 3500 பேருடன் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்!

Wednesday, February 5th, 2020

கொரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் மாத்திரம் 425 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் சீனாவில் உள்ள 33 மாகாணத்தில் பரவியுள்ள நிலையில் சீனாவை தவிர மேலும் 24 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து சொகுசு கப்பல் ஒன்றில் ஜப்பான் வந்த 80 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து யொகோஹமாவா செல்லும் டுடையமன் பிரின்ஸ்டு என்ற சொகுசு கப்பலில் உள்ள பயணிகளை முழுமையான தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்த ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கப்பலில் 2600 பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts: