கொரோனா வைரஸ் : யாழ் மக்களிற்கு அவதானம் அவசியம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா புகுந்து மோசமான அழிவை ஏற்படுத்தும் 100% வாய்ப்பு உள்ளதாக நேற்று முன்தினம் வைத்தியர்கள் கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏனெனில் முன் எச்சரிக்கைகளை உதாசீனம் செய்து மக்கள் கூட்டம் கடைகளில் குவிகிறதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .
அத்துடன் நிறுத்தப்படாது தொடரும் திருவிழாக்கள் களியாட்ட நிகழ்வுகள், அனாவசிய ஒன்று கூடல்கள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத பரிதாப நிலை யாழில் காணப்படுவதாகவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளப் போதிய வசதிகள் வளங்கள் இங்கு கிடையாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
யாழில் கொரோனா புகுந்ததால் அது நினைத்துப் பார்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே வருமுன் காத்து உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் எனவும் வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related posts:
|
|