வங்கிக் கடன்கள் மூலம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டும்!

Monday, August 13th, 2018

அபிவிருத்தி என்ற பெயரில் தமக்கு வழங்கபட்ட வீட்டு திட்டங்கள் காரணமாக வங்கிகளில் பெற்ற கடன்களை இதுவரை மீள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக பாதிக்கபட்ட வர்த்தகர்கள் பொது மக்கள் என பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

காலம் கடந்து செல்லும் இந்த வங்கிக்கடன்கள் மூலம் தாம் தொடர்ந்து பாதிக்கபட்டு வருவதாகவும் இது தொடர்பில் சமூகமட்ட அமைப்புகள் பலவும் பாராமுகமாக இருந்து வருவதாகவும் பாதிக்கப்பட வங்கி கடனாளிகள் தெரிவித்து வருகின்றனர்

குறிப்பாக 2010,2011ம் ஆண்டுகளில் மக்கள் தமது மீள் குடியேற்றத்தின் பின்னர் பெற்ற வங்கி கடன்களே இவ்வாறு தமக்கு சுமை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த வங்கிக் கடன்களுக்கான வட்டி குறைப்புகளை செய்து இதனை இலகுவாக மீள் அழிப்பு செய்வதற்கு அரசியல் அமைப்புகள் உட்பட சகலரும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்

இவ்வாறு வங்கி கடன் முடக்கதினால் தாம் நுண் கடன்களை பெற வேண்டிய நிலைக்கு தள்ளபடுவதாகவும் நுண் கடன்கள் தமக்கு பாரிய சுமைகளை ஏற்படுத்தி தருவதாகவும் பாதிக்கபட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்

எனவே இது தொடர்பில் சமந்தபட்டவர்களுக்கு விரைந்து கூடிய கவனம் செலுத்தி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

Related posts: