கொரோனா வைரஸ் ஒழிப்பு: வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!

Monday, March 30th, 2020

கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வேலையற்ற பட்டதாரிகளை சுகாதார சேவைகள் காரியாலயத்தின் சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே பிரதேச காரியாலயங்களில் சேவைக்கா வருகைத்தந்த பட்டதாரிகளுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு எதிர்வரும் மே மாதமளவில் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சிற்கு உதவிகளை வழங்கும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலயங்களுக்கு தற்காலிகமா சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இன்று (30) சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts:

வெறுப்பூட்டும் பேச்சுக்கள், தேர்தல் வன்முறையை தோற்றுவிப்பதற்கு வழிவகுக்கும் - கஃபே அமைப்பு சுட்டிக்...
நடத்துனர்களின்றி பேருந்து போக்குவரத்தை முன்னெடுக்க யோசனை முன்வைப்பு - தனியார் பேருந்து உரிமையாளர்கள்...
லங்கா ஐஓசி இன்று 100 எண்ணெய் தாங்கிகளில் 1.5 மில்லியன் லீற்றர் பெற்றோல் மற்றும் டீசல் என்பவை விநியோக...