நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்!
Thursday, November 9th, 2017
ஊழல் மோசடிகள் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது விசேட மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்காக பிரேரணையினை நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள முன்வைத்தார். குறித்த இந்த பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட மூன்று தீர்ப்பாயங்கள் இதற்கிணங்க அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி - பிரதமர் இறை வழிபாடுகளில் பங்கேற்பு!
சுயநலன்களுக்காக மாணவர்களின் கல்வி பறிப்பு : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது - அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப...
|
|
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் மயிலிட்டி கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அலுவலகத்திற்கு இடம் வழ...
வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 09 வீதமாக தொடர்ந்தும் பேணுவதற்கு ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகை!


