கொரோனா வைரஸ் எதிரொலி: இதுவரை இலங்கையில் 900 பில்லியன் ரூபா நட்டம்!

Saturday, May 2nd, 2020

கொரோன வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் 900 பில்லியன் ரூபா பொருளாதார நட்டம் ஏற்படும் என மூடிஸ் முதலீட்டு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மதிப்பீடுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் 2020ஆம் ஆண்டில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நட்டம் 900 பில்லியன் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இது 2020ஆம் ஆண்டுக்கான மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகையினால் உலகப் பொருளாதாரம் சுமார் 900 பில்லியன் டொலர் பாதிப்பினை எதிர்நோக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இந்த பாதிப்பாளது ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் மொத்த பொருளாதாரத்தை விடவும் இந்த தொகை பெரியது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோய்த் தொற்று காரணமாக உலகப் பொருளாதாரம் மறை 3 வீத பொருளாதார வீச்சியையும், இலங்கை மறை 0.5 வீத பொருளாதார வீழ்ச்சியையும் பதிவு செய்யும் என பிரபல பொருளியியலாளர் மேர்வின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Related posts: