கொரோனா தொற்று நோயாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 29 நோயாளர்கள் 15 வைத்தியசாலைகளில் அனுமதி – தேசிய தொற்று நோயியல் பிரிவு!

Friday, March 13th, 2020

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று நோயாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 29 நோயாளர்கள் சோதனைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள 15 வைத்தியசாலைகளிலே இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் எட்டு பேர் அங்கொட தேசிய வைத்தியசாலையிலும், நால்வர் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் தனிமைப்படுத்தல் சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்த வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இதுவரையில் இரண்டு கொரோனா நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையிலும் கொரோனா பரவக்கூடுமென அச்சம் நிலவுவதால் இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: