சிறார்கள் கல்வியுடன் விளையாட்டுத்துறையிலும் சாதிப்பவர்களாகத் திகழவேண்டும் – ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் இரவீந்திரதாசன்!

Tuesday, March 19th, 2019

முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் செயற்பாடுகள் சிறப்பாக அமையப்பெறும் போது தான் பிரதேசத்தின் எதிர்காலமும் சிறப்பாக அமையும். அத்தகையதொருநிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நாம் நீண்டகாலமாக உழைத்துவருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தெரிவித்துள்ளார்.

கொக்குவில் கலைவாணி முன்பள்ளி சிறார்களின் விளையாட்டுவிழா நேற்றையதினம் தலைவர் திரு.இராசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கௌரவ விருந்தினராக கலந்து நிகழ்வைச் சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் –

ஒவ்வொரு சிறார்களும் சிறந்த முறையில் கல்வி கற்று தத்தமது பிரதேசத்தை தூக்கி நிறுத்தும் தூண்களாக மிளிர வேண்டும். அதற்கான அத்திபாரதத்தை இடுவது இந்த முன்பள்ளிகள் தான். ஆனாலும் இச் சிறார்களுக்கு கற்றலை மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய விளையாட்டு உள்ளிட்ட பல விடயங்களைக் கற்றுக்கொடுக்கும் இடமாக இது காணப்பட்டாலும் அத்தகைய கற்றலைப் போதிக்கின்ற பல ஆசிரியர்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டே வருகின்றனர்.

இவர்களது இந்த பிரச்சினைகளுக்கு கடந்த காலத்தில் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல தேவைப்பாடுகளை பெற்றுக் கொடுத்திருந்தாலும் இன்னமும் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயமாக எமது எதிர்கால சந்ததியினரின் கல்வித்தரம் மேலும் சிறப்புறும் என்றே நம்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.    

Related posts: