கொரோனா அனர்த்த காலத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் இழப்பு – மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, May 27th, 2020

கொரோனா நிலைமை காரணமாக அக்காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 45 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவேளை 2019 ஆம் ஆண்டு பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10.09 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துக் கூறுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: