கொரோனாவின் உச்சக்கட்ட ஆபத்தில் யாழ்ப்பாணம் – வடக்கில் 44 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, March 25th, 2021

யாழ்.திருநெல்வேலி பொதுச்சந்தை தொகுதியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆர் பரிசோதனையில் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும்வரை சந்தை முடக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

அத்துடன் தொற்றுக்குள்ளான 24 பேரில் சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தையை சூழவுள்ள கடைத்தொகுதி வியாபாரிகளும் அடங்கியிருக்கும் நிலையில் திருநெல்வேலி பொதுச்சந்தைத் தொகுதி முழுமையாக மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது.

இதேநேரம் திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் தம்மை சுயதனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளதுடன் தமது விவரங்களை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அல்லது வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 222 6666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மேலும் கேட்டுள்ளார்.

Related posts: