நிர்ணய விலைக்கு அமைய சீனியை விற்பனை செய்ய முடியாதுள்ளது – இறக்குமதியாளர்கள்!

Saturday, January 7th, 2017

சந்தையில் சீனியின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. அரசாங்கம் சீனிக்கான நிர்ணய விலையாக 95 ரூபாவை அறிவித்திருந்தது. எனினும், இன்று சந்தையில் ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 105 ரூபாவாக அமைந்துள்ளதென சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் ஹேமக பெர்னாண்டோ தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைக்கு அமைய, ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒரு கிலோகிராம் சீனிக்கு 2 வீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வௌ்ளை சீனிக்கு 13 வீத விசேட வரத்தக வரி விதிக்கப்பட்டது.

உலக சந்தை விலையின் அடிப்படையில் வரி விதிக்கப்பட்டதாக அந்த சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சு குறிப்பிட்டது. இந்த வரிச் சுமையை வர்த்தகர்கள் ஏற்க வேண்டும் எனவும் அமைச்சு அறிவித்திருந்தது.

இதற்கமைய, தற்போது ஒரு கிலோகிராம் சீனிக்கு 15 ரூபா 50 சதம் வரி அறவிடப்படுவதாக சீனி இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். இதனால் அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அமைவாக சீனியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் சுட்டிக்காட்டினார்.

sugar-03

Related posts: