கொரோனாவால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கென 53 பில்லியன் நிதியில் கடனுதவி – ஒப்புதலளித்தது இலங்கை மத்திய வங்கி!

Saturday, July 4th, 2020

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கென 53 பில்லியன் ரூபாவுக்கான கடன் திட்டதிற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது

4 சதவீத வட்டி வீதத்தில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக சௌபாக்யா மறுமலர்ச்சிக் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி நாட்டில் பொருளாதார நடவடிக்கை புத்துயிர் பெறுவதற்கு மத்திய வங்கி ஆதரவளிக்கின்றது.

இந்தக் கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ஒரு பில்லியன் ரூபாவுக்கு குறைவான வருடாந்த புரள்வுடன் கூடிய, கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

1 பில்லியன் வருடாந்த புரள்வு மட்டுப்பாடானது சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts: