கே.கே.எஸ் பகுதிக்கு புதிய எஸ்.எஸ்.பி கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Friday, December 22nd, 2017

யாழ்ப்பாணம். காங்கேசன்துறைப்பகுதிக்கு புதிய எஸ்.எஸ்.பி  நியமிக்கப்பட்டுள்ளார். ஹற்றனில் எஸ்.எஸ்.பி ஆக இருந்த உடுவெலசூரிய என்பவரே காங்கேசன்துறைப்பகுதிக்கான புதிய எஸ்.எஸ்.பி ஆக நியமிக்கப்படடுள்ளார்.

மல்லாகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது கடமைகளைப்பொறுப்பேற்றார். முன்னதாக காங்கேசன்துறை பொலிஸ்நிலையத்தில் அவருக்கான வரவேற்பு அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன. கடந்த காலங்களில் காங்கேசன்துறைப்பகுதிக்கான எஸ்.எஸ்.பி ஆக மகாசிங்க கடமையாற்றியிருந்தார். அவர் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்

இதேவேளை ஊர்காவற்துறைப்பொலிஸ் நிலையத்துக்கும் புதிய பொறுப்பதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக்கடமையாற்றிய விக்கும வீரசேகர என்பவரே இவ்வாறு ஊர்காவற்துறைப்பொலிஸ் அதிகாரியாக நேற்று முன்தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Related posts: