கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர் தர்சானந்தனுக்கு சாட்டையடி கொடுத்த ஈ.பிடி.யின் உறுப்பினர் சட்டத்தரணி றெமீடியஸ்!

Wednesday, January 13th, 2021

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது காழ்ப்புணர்சிகளை சுமத்த முற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தர்சானந்தனுக்கு ஈழ மக்க்ள ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் றெமீடியஸ் சாட்டையடி கொடுத்திருந்தார்.

குறிப்பாக வரலாறுகளை மறைக்காது உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் பொதுவான நினைவாலயம் அமைக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்திய போது அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவு கூரமுடியாத என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோரிக்கையை நிராகரிக்கமாறும் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த றெமிடியஸ் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது வவுனியாவில் தஞ்சமடைந்த தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தும் கொலை செய்ததும் புளொட் அமைப்பினரை சார்ந்தவரக்ளே என்றும் அவ்வாறு கொடூரங்களை அரங்கேற்றி மக்களை அவலத்தில் தள்ளிய அக்கட்சியின் பிரதிநிதியாக இருந்துகொண்டு தேசியம் என்று தமிழ் உரிமைப் போராட்டத்தின் வரலாறு தெரிந்திராது புலம்புவதில் நியாயம் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுபியிருந்தர்.

அதுமட்டுமல்லாது தமிழ் மக்களை அழிக்க முற்பட்டதாக கூறி பயங்கரவாத செயற்பாடுகளால் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் இருந்த தர்சானந்தனை விடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே காரணமாக இருந்தார் என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனது மகன் செய்த பயங்கரவாத செயலை மன்னித்து தர்சானந்தை விடுவிக்க அரசிடம் பரிந்துரைக்குமாறு அவரது தாயார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அவரது யாழ் அலுவலகத்திற்கு சென்று அழுதுபுலம்பியதை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சாதுரியமான அரசியல் நகர்வின் மூலம் யாழ் வீரசிங்கம் மணட்பத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தர்சானந்தின் தாயாரை வரவழைத்து அன்றைய ஜனாதிபதி மஹிந்தவிடம் நேரடியாக பேசுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து அதே இடத்தில் வைத்து தர்சானந்தை விடுவிக்க உத்தரவை பெற்றுக்கொடுத்ததையும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தங்களுக்கு அநியாயம் செய்யத குற்றவாழிகளையும் பயங்கரவாதிகளையும் மன்னித்து அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததே தவிர ஒருபோதும் பழிவாங்கியது கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் தமிழ் மக்களின் இன்றைய அனைத்து அழிவுகள் மற்றும் துன்ப துயரங்களுக்கு அதி தீவர தேசியம் பேசும் அகில இலங்கை தமிழ் காங்கிரசே காரணம் என்றும் இவர்கள் தங்களது போலி முகத்திரையை கிழித்து மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: