குடாநாட்டில் 17 பாதாள உலக குழுக்களைத் தேடி பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் செயற்படுவதாக கூறப்படும் 17 பாதால உலகக் குழுக்களில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
இதற்காக 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், தற்பொழுது வரையில் மூன்று குழுக்களைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 17 பொலிஸ் நிலையங்களைத் தொடர்புபடுத்தியதாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு தம்மிடமுள்ள ஆயுதங்களுடன் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடையுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related posts:
மீண்டும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
3 கொரோனா நோயாளர்கள் ஆபத்தான நிலையில் - சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவிப்பு!
யாழ்.மாநகரில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம் – வியாபாரிகள் கவலை!
|
|