கிளி.மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

Thursday, January 24th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச மருத்துவமனைகளில் டிசம்பர் மாதம் தொடக்கம் இவ்வாறு உயிர் காக்கும் மருந்துகளுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பலமுறை இதுதொடர்பாக உரிய தரப்பினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரியப்படுத்தியும் இதுவரை அவை கிடைக்கப்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்துச் செயற்படுத்த வேண்டும். அவசர தேவைகள் ஏற்படும்போது மருந்துகள் இல்லாத காரணத்தால் உயிர்கள் பறிபோகின்ற நிலை கூட வரலாம்.

கிளிநொச்சி மாவட்டம் மட்டும் அல்லாது நாடு ரீதியாகவும் சில மாவட்டங்களில் பல்வேறு வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது.

Related posts: