கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிப்பு – இன்றுமுதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுப்பு!

Tuesday, January 4th, 2022

கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயால் கடந்த வருடம் 27 மரணங்களும் பதிவானதாக அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயால் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அந்த மாவட்டத்தில் 5 ஆயிரத்து 515 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இன்றுமுதல் விசேட டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, டெங்கு அச்சுறுத்தல் நிலவும் 15 மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன்படி, 81 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் ஆரம்பமாகவுள்ள இந்த டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: