கிளிநொச்சி கோர விபத்து – வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்!

Wednesday, June 26th, 2019

கிளிநொச்சி இராணுவ மருத்துவமனைக்கு சொந்தமான டிரக் ரக வாகனம் யாழ்தேவி தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுவருகின்றனர்.

இந்த சம்பவத்தில் டிரக் ரக வாகனத்தில் பயணித்த 6 இராணுவத்தினர் பலியாகினர்.

குறித்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அருகிலிருந்த பிரதேச மக்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவத்தில் பலியான இராணுவத்தினரின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றவுடன் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் குறித்த விபத்து இடம்பெற்றபோது சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலி எழுப்பும் கருவி என்பன இயங்கியதா? இல்லையா? என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: