கிளிநொச்சியில் மலேரியா தொடர்பான பரிசோதனைகள்!

Tuesday, June 12th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்தம் 3000 பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காய்ச்சல் ஆய்வு நடவடிக்கையின் கீழ் மாதாந்தம் மூவாயிரம் பேருக்கு மலேரியா பற்றிய ஆய்வுகள் இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், பூச்சியியல்ஆய்வு நடவடிக்கையின் கீழ் மலேரிய பரவக்கூடிய வகையில் காணப்படுகின்ற அக்கராயன் இரணைமடுக்குளம் ஆகிய பகுதிகளில் நுளம்புகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச்செல்வோர் இந்தியாவில் இருந்து மீளத்திரும்புவோர் ஆகியோருக்கும் மலேரியா பற்றிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: