கிராமத்தின் வளர்ச்சிக்காக தம் முன்னெதிரே காணப்படும் தடைகளை தாண்டி நேர்மையாக உழைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் – ஈ.பி.டி.பியின் வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அரிகரன்!

Thursday, December 13th, 2018

ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்காக தம் முன்னெதிரே காணப்படும் தடைகளை தாண்டி நேர்மையாக உழைப்பதற்கு முன்வரவேண்டும். அவ்வாறானதொரு நிலைப்பாட்டை உருவாக்குவதன் மூலமே அழிந்துவரும் எமது பிரதேசத்தின் கல்விநிலையை மீண்டும் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அரிகரன் தெரிவித்துள்ளார்.

வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஈவினை பகுதி கலைமகள் முன்பள்ளி மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது. இதில் பிரதம அதிதிகளாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் தெற்கு பிரதேச நிர்வாக செயலாளரும் குறித்த பிரதேச சபையின் உறுப்பினருமான சந்திரன் வலன்ரயன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் அரிகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இதன்போது உரையாற்றுகையிலேயே அரிகரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இன்று இந்த முன்பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்று தேர்வுகண்டு தமது கல்வியின் அடுத்த கட்டத்திற்கான நகர்வை இந்த மாணவர்கள் எட்டியுள்ளனர்.

அந்தவகையில் இந்த மாணவர்கள் புதிய ஆண்டில் தரம் ஒன்றுக்கான பாடசாலை கல்விக்கு தம்மை தயார்ப்படுத்திக்கொண்டுள்ளனர் என்றே கருதமுடிகின்றது. அந்தவகையில் இந்த மாணவர்களுக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்றும் வாழ்த்துகின்றோம்.

அத்துடன்  இதற்காக இந்த மாணவச் செல்வங்களுக்கு அயராது கற்றல் செயற்பாடுகளை செய்து வழிகாட்டிய முன்பள்ளி ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.

மேலும் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை தொடரும் நிலையில் இந்த மாணவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைவற்கு சிறுவர்களின் பெற்றோருடன் இந்த சமூகமும் அவர்களுக்கு ஒத்தாசையாக செயற்படவேண்டும் என்றார்.

5 viber image 2 0

Related posts: