கிடைத்த உரிமைகளைக்கூட தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமைக்கு காரணம் யார்? – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் கேள்வி!

Friday, February 10th, 2017

வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசினால் வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகள் முழுமையாக மக்களது அபிவிருத்திகளுக்காக பயன்படுத்தப்படாமல் திரும்பும் நிலைக்கு  காரணம்  ஆற்றலும் அக்கறையும் அற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே தவிர மத்திய அரசு அல்ல என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்  தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை சந்தை மேற்கு பகுதி மக்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்  –

கடந்த வருடம் வடக்கு மாகாணசபைக்கு என மத்திய அரசினால் 2300 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிதியை வடக்கு மாகாணசபை சரியாக மக்களது தேவைகளுக்கு பயன்படுத்தாது இருந்ததுடன் தமது தேவைகளுக்காக 120 கோடி நிதியை செலவு செய்துவிட்டு மிகுதி நிதியை வெறும் வெட்டிப் பேச்சுக்களை பேசி காலத்தை இழுத்தடிப்பு செய்து அபிவிருத்திகளை தடுத்து நிறுத்தியதுடன் மிகுதி நிதியை மீளவும் மத்திய அரசிடம் திரும்பிச் செல்லும் நிலையை தோற்றுவித்திருந்தது.

வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதியை மக்களது நலன்களுக்காக முழுமையாக பயன்படுத்தியிருந்தால் இன்று வடபகுதியின் வீதிகள் அனைத்தும் புனரமைத்திருக்கலாம்.. வீடுகள் அற்றவர்களது பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம்… தொழில் வாய்ப்புகளுக்கான களங்களை உருவாக்கி தொழில் வாய்ப்பில்லாத பிரச்சினைகளுக்கு திர்வு கண்டிருக்கலாம்… அத்துடன் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது வாழ்வியல் தேவைகளையும் பெற்றுக்கொடுத்து சிறந்த அபிவிருத்தியுடன் கூடிய மாகாணமாக எமது மாகாணத்தை உருவாக்கியிருக்கலாம்

ஆனால் ஆழுமையும் ஆற்றலுமற்றவர்களிடம்  வடக்கு மாகாணசபை சிக்கியுள்ளதால் எமது பகுதிக்கான அனைத்து அபிவிருத்திகளும் முடக்கப்பட்டதுடன் எமது உரிமைகளை மட்டுமல்லாது வாழ்வாதாரத்தையும் மக்கள் இழக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே அதிகாரங்களை வழங்கும் போது ஆற்றலுள்ள தலைமைகளிடம் கொடுக்கவேண்டும்.ஆனால் தமிழ் மக்கள் இன்றுவரை அதில் தெளிவுகாணவில்லை.

கடந்த காலங்களில் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா தன்னிடம் இருந்த அரசியல் பலத்தின் மூலமான அதிகாரங்களை கொண்டு மக்களது பல்வேறுபட்ட தேவைகளையும் அவர்கள் வாழும் பிரதேசங்களினது அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

எனவே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களுக்கு இனிவரும் காலத்தில் மக்களது அதிகரித்த அரசியல் பலம் கிடைக்கப்பெறுமானால் தற்போது தடைப்பட்டிருக்கும் மக்களது தேவைகளையும் அபிவிருத்திகளையும் அரசியல் உரிமைசார் பிரச்சினைகளையும் வெகு விரைவில் பெற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

இந்த சந்திப்பின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்), கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார். (குமார்) ஆகியோருடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

16650727_1317695664936184_1279782997_o

16709681_1317695634936187_1338860626_o

Related posts: